9 மணி விளக்கேற்றும் நிகழ்வு: ஆர்வக்கோளாறால் ஏற்பட்ட அசம்பாவிதம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு கொரோனாவுக்கு எதிரான போரில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிப்பதற்காக வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகளையும், மெழுகுவர்த்தி, டார்ச்லைட் ஆகியவற்றை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்

பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் அனைவரும் நேற்று இரவு சரியாக 9 மணி முதல் 9.09 வரை மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றினர். இதனால் நாடு முழுவதும் அரசுக்கு ஆதரவாக மக்கள் இருக்கின்றனர் என்பது உறுதியானது

ஆனால் ஒருசிலர் ஆர்வக்கோளாறில் செய்த செயல்களால் ஓரிரண்டு அசம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் என்ற இடத்தில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பட்டாசு வெடித்ததை அடுத்து அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் அந்த வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த வீட்டிலுள்ள யாருக்கும் எந்த சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னை எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் ஒரு சிலர் ராக்கெட்டுகளை வெடித்தனர். இந்த ராக்கெட்டுகள் அங்கிருந்த குப்பைகள் மற்றும் காய்ந்த இலைச்சறுகுகள் மீது விழுந்ததால் தீவிபத்து ஏற்பட்டு அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் மற்றும் திருவான்மியூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்

நேற்றிரவு ஒருசிலரின் ஆர்வக்கோளாறால் ஒருசில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவும் நேற்று தங்களுடைய ஒற்றுமையை நிரூபிக்க அகல் விளக்கேற்றி பிரதமரின் வேண்டுகோளை சிறப்பாக நடத்தி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

டுவிட்டரில் விண்ணப்பித்தாலும் உதவி கிடைக்கும்: தமிழக முதல்வரின் செயல்

முன்பெல்லாம் அரசிடம் இருந்து ஒரு உதவி தேவை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்து அது அரசின் கவனத்திற்கு சென்று அதன்பின்னர்

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 571

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 11 பேர் பலி: மொத்த எண்ணிக்கை 79ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி வரும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுமா? மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டது. மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது ஏப்ரல் 14ம் முடிவடைவதால்

ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா? அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது என்பதும் அந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கும்