ஒரே நேரத்தில் முடிவடையும் பெரிய படங்களின் படப்பிடிப்பு.. ரிலீஸில் மோதல் இருக்குமா?

  • IndiaGlitz, [Monday,June 26 2023]

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் முடிவடையும் நிலையில் இருப்பதால் இந்த படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுமா? அல்லது போட்டியை தவிர்த்து சோலோவாக ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டன. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இதுவரை இல்லாத அளவில் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது

அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கார்த்தி நடித்த ’ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டன. அதேபோல் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த படமும் இன்னும் ஒரு வாரங்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

தளபதி விஜய்யின் ’லியோ’ அக்டோபர் 19ஆம் தேதியும், கார்த்தியின் ’ஜப்பான்’ தீபாவளி தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா 2’ படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ’இந்தியன் 2’ ’கேப்டன் மில்லர்’ ’தங்கலான்’ படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் வெளியாக அறிவிக்கப்படவில்லை என்பதால் இவை ஒன்றுக்கொன்று போட்டியுடன் போதுமா அல்லது சோலோவாக ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்றும் சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.

More News

'சந்திரமுகி 2' ரிலீஸ் எப்போது? போட்டியில்லாமல் ரிலீஸ் ஆகிறதா?

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு இப்போது வரை எந்த போட்டியும் இல்லை என்றும் கூறப்படுகிறது

'புரொஜக்ட் கே' படத்தில் இணைந்தது குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன் 'புரொஜக்ட் கே' படத்தில் இணைந்துள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரை வரவேற்று தங்களது சமூக வலைதளங்களில் அமிதாப்பச்சன், பிரபாஸ் உள்ளிட்டோர் பதிவு செய்திருந்தனர்

ரூ.60 லட்சம் வீடு பரிசு பெற்ற சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் இவரா? குவியும் வாழ்த்துக்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது சூப்பர் சிங்கர் என்பதும் கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது என்பதையும் பார்த்தோம்.

'ஆதிபுருஷ்' படத்தை பங்கமாய் கலாய்த்த சேவாக்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

சமீபத்தில் வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படம் வசூலில் சாதனை செய்தாலும் இந்த படம் நெட்டிசன் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது என்பதும் இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 7: ஆடிஷனில் கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி