ஆரியை ரவுண்டு கட்டும் ஹவுஸ்மேட்ஸ்: புத்திசாலித்தனமாக தப்பித்த சோம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் ஆரிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போவது வெளியில் உள்ள பார்வையாளர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வீட்டில் உள்ள சக ஹவுஸ்மேட்ஸ்கள் இப்போதுதான் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்
ஆரி ஃபைனலுக்கு கிட்டத்தட்ட சென்று விட்டதாகவும் அவர் தான் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்பு உள்ளது என்றும் சக ஹவுஸ் மக்களின் மனதில் தற்போதுதான் புரிய ஆரம்பித்து உள்ளது. எனவே அவரை முடிந்தளவு ரவுண்டு கட்டும் பணியை தொடங்கியுள்ளனர்
ஏற்கனவே ஷிவானி மற்றும் ரம்யா ஆகிய இருவரும் ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். அதேபோல் இன்னொரு பக்கம் பாலாஜி ஆரியை ஓபனாக எதிர்த்து தொடங்கிவிட்டார். நேற்று ஹவுஸ் கீப்பிங் பணியை செய்ய முடியாது என்றும் ஆரியிடம் அவர் வாதாடுவதில் இருந்தே இது தெரிகிறது. மேலும் கேபி, ரியோ மற்றும் சோம் கூட்டணியும் குரூப்பாக ஆரியை விமர்சித்து வருகின்றனர். மொத்தத்தில் ஆரியை ரவுண்டு கட்டும் பணிகள் தொடங்கி விட்டது என்று கூறலாம்.
ஆனால் சோம் மட்டும் சற்று புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார். ஆரியிடம் சண்டை போடுபவர்கள் அடுத்தடுத்து வெளியே போகிறார்கள் என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்ட சோம், நேற்று காப்பி டாஸ்க்கில் தான் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்த ஆரியை முதலில் கிண்டல் செய்தார். அதன் பின்னர் திடீரென ஆரியிடம் போய் சரணடைந்தார். நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு முதலில் வெறுப்பாக இருந்தது என்றும், புரியவில்லை என்றும், ஆனால் யோசித்துப் பார்த்த போது நீங்கள் கேட்டது சரியான கேள்விதான் என்றும், இப்போது நான் என்னையே புரிந்து கொண்டேன் என்றும் டன் கணக்கில் ஆரிக்கு ஐஸ் வைத்து, அவரை கட்டிப்பிடித்து சமாதானமாகி விட்டார். எனவே ஆரி ஆர்மியினர் டார்கெட்டில் இருந்து சோம் தப்பித்துவிட்டதால் அவர் ஆரியுடன் கிட்டத்தட்ட இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதாகவே கருதப்படுகிறது
ஆனால் ஆரியை கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்து வரும் ரம்யா இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ளதால் ஆரியின் ரசிகர்கள் அவரை குறிவைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout