துல்கர் சல்மானின் 'சோலோ' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்

  • IndiaGlitz, [Thursday,September 28 2017]

'ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மானின் அடுத்த படமான 'சோலோ' சமீபத்தில் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இன்று இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் துல்கர் சல்மான், நேஹா சர்மா, நாசர், சுஹாசினி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார்

நீர், நிலம், காற்று, நெருப்பு என நான்கு நிலைகளை குறிக்கும் நான்கு கதைகள் சேர்ந்தது தான் இப்படம். வித்தியாசமான 4 கதைகள் ஒரே படத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் இந்த படத்தின் ஹைலைட்.