தனது குரலில் பிரபலங்களிடம் பேசிய மென்பொறியாளரை சாதுர்யமாக கண்டுபிடித்த சரத்குமார்!

  • IndiaGlitz, [Thursday,July 30 2020]

மென் பொறியாளர் ஒருவர் மென்பொருளின் உதவியுடன் தன்னை போலவே பிரபலங்களிடம் பேசியதை நடிகர் சரத்குமார் சாதுரியமான கண்டுபிடித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார், மென்பொருள் ஒன்றின் உதவியால் தனது குரலில் மர்ம நபர் ஒருவர் பல பிரபலங்களுடன் பேசியுள்ளார். சரத்குமார் ஏன் தங்களுடன் அடிக்கடி பேசுகிறார் என்று குழப்பம் அடைந்த அந்த பிரபலங்கள் சரத்குமாரிடமே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்தபோது தான் அவ்வாறு யாரிடமும் பேசவில்லை என்று சரத்குமார் தெரிவித்தார்

அதன்பின்னர் அந்த பிரபலங்களிடம் இருந்து செல்போன் எண்ணை வாங்கிய சரத்குமார், சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்து அவர் யார்? எதற்காக இப்படி செய்கிறார்? போன்ற விவரங்களை சாதுரியமாக கேட்டறிந்தார். தான் கோவையை சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் என்றும் மென்பொருள் ஒன்றின் உதவியுடன் பிரபலங்களின் குரலில் மற்ற பிரபலங்களுடன் பேசியதாகவும் அவர் சரத்குமாரிடம் தெரிவித்துள்ளார்

இதனையடுத்து அந்த நபரை கண்டித்த சரத்குமார், அதன் பின்னர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சரத்குமாருடன் பேசிய நபர் கோவை என்று கூறினாலும் அவர் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்புடன் பேசியதால் அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் அந்த நபர் சரத்குமார் மட்டுமின்றி இன்னும் வேறு பிரபலங்களின் குரலில் பேசினாரா? இந்த மென்பொருளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டாரரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 

More News

பார்த்தேன்‌, ரசித்தேன்‌, மகிழ்ந்தேன்: தனுஷின் நெகிழ்ச்சியான அறிக்கை

தனுஷின் பிறந்த நாள் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது. அவரது ரசிகர்கள் காமன் டிபி போஸ்டர்களை வெளியிட்டது,

தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிஸம், குரூப்பிஸமா? சாந்தனு டுவிட்டால் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதில் இருந்தே நெப்போட்டிஸம் என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: தியேட்டர்கள் திறக்க அனுமதியா?

கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவும் அதனையடுத்து அன்லாக் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அன்லாக் 2.0 வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கவிழ்ந்த காரின் கண்ணாடியை உடைத்து கைக்குழந்தையை காப்பாற்றிய பொதுமக்கள்! வைரலாகும் வீடியோ

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித் தவித்த ஏழு மாத கைக்குழந்தை உட்பட தம்பதியை பொது மக்களே காப்பாற்றிய சம்பவம்

தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினமும் சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கும்