close
Choose your channels

சாப்ட்வேர் எஞ்சினியரின் லேப்டாப்பில் 11 இளம்பெண்களின் நிர்வாண வீடியோ! 9ஆம் வகுப்பு சிறுமியால் சிக்கினார்

Tuesday, January 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திண்டுக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது லேப்டாப்பில் 11 இளம் பெண்களின் நிர்வாண வீடியோக்களை வைத்து இருந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்பதாம் வகுப்பு சிறுமி ஒருவரை மிரட்டியபோது தற்போது போலீசில் பிடிபட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது தாயாரின் செல்போனில் இன்ஸ்டாகிராம்ஐ பயன்படுத்தி வந்தார். அதில் விதவிதமான தனது புகைப்படங்களை பதிவு செய்து கொண்டிருந்தபோது ஒரு இளைஞர் அந்த புகைப்படங்களுக்கு அடிக்கடி லைக் மற்றும் கமெண்ட் போட்டுள்ளார். அதன் பின்னர் அந்த சிறுமியை போனில் தொடர்பு கொண்ட இளைஞர், விதவிதமான புகைப்படங்களை தனக்கு அனுப்ப கூறினார். இன்ஸ்டாகிராம் நண்பர் என்று நம்பி அந்த சிறுமி தனது புகைப்படங்களை அனுப்பினார். அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிய அந்த இளைஞர் தனது இச்சைக்குப் பணிய வேண்டும் என்றும் இல்லையேல் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்து அந்த சிறுமி தனது தாயாரிடம் இதுகுறித்து கூறிய போது, அந்த சிறுமியின் தாயாருடன் பேசிய அந்த இளைஞர் ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்தால் புகைப்படம் அனைத்தையும் ஒப்படைத்து விடுவதாக கூறினார். இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் கொடுக்க, 2 லட்சம் தருவதாக ஒப்புக் கொள்ளுங்கள், அவரை நீங்கள் கூறிய இடத்திற்கு வரவழையுங்கள் என்று ஐடியா கூறியுள்ளனர்.

இதனை அடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தால் ரெண்டு லட்சம் தருவதாக சிறுமியின் தாயார் கூற அதனை நம்பி அந்த இளைஞர் வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் அவரது பெயர் சாய் என்றும் தெரியவந்தது.

மேலும் அவரிடம் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் 11 இளம்பெண்கள் வீடியோக்கள் இருந்ததும் இதேபோல் பல இளம்பெண்களை அவர் மிரட்டி பணம் பறித்து உள்ளதும் தெரியவந்தது. தற்போது அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகிவிட்டது என்பதும் இவ்வளவு நடந்தும் மனைவிக்கு இவருடைய இந்த குற்றச் செயல் எதுவும் தெரியாமல் அப்பாவித்தனமாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment