குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர். உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Thursday,March 02 2017]
ஒருபக்கம் நேற்று முதல் தமிழகத்தில் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை விற்பதில்லை என்று வணிகள் முடிவெடுத்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்பட குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.
நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விசாரணையில் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த நவம்பர் மாதம் இடைக்கால தடை விதித்தது.
இந்த இடைக்கால தடையை எதிர்த்து குளிர்பான ஆலை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை மட்டுமே பயன்படுத்துவதாகவும், இதனால் இடைக்கால தடையை நிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், தாமிபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளது.