டிக்டாக்கில் புகழ் பெற்ற 9 வயது சிறுமி மர்ம மரணம்!

  • IndiaGlitz, [Saturday,July 27 2019]

கேரளாவில் டிக்டாக் வீடியோவால் புகழ் பெற்ற ஆருணி என்ற 9 வயது சிறுமி மர்ம நோயால் மரணம் அடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்தினர்களையும் டிக்டாக் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

மலையாள பாடல்கள் பின்னணியில் ஆருணி தோன்றும் டிக்டாக் வீடியோவுக்கு கேரளாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென ஆருணிக்கு உடல்நலமின்றி போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் சில பிரச்சனை இருந்ததாகவும், அந்த பிரச்சனை என்னவென்று தெரியாமல் மருத்துவர்கள் குழப்பம் அடைந்ததாகவும் தெரிகிறது. தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் ஆருணி கடந்த 25ஆம் தேதி மரணம் அடைந்தார்.

கடந்த ஆண்டு தான் ஆருணியின் தந்தை சவுதி அரேபியாவில் ஒரு விபத்தில் காலமான நிலையில் தற்போது ஆருணியும் மரணம் அடைந்துவிட்டதால் அவரது குடும்பத்தினர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆருணியின் ஆத்மா சாந்தியடைய அவரது டிக்டாக் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்,

More News

தமிழ்ப்பட நாயகி கடத்தப்பட்டாரா? நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

தமிழ் படம் ஒன்றில் நாயகியாக நடித்த ஒருவர் கடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சேரனுடன் செல்பி எடுத்த மீராமிதுன்: இது எப்போ?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன், சேரனை கடந்த சில வாரங்களாக குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். அவர் கடைசியாக சேரன் மீது கூறிய இடுப்பு குற்றச்சாட்டு எடுபடவில்லை

எவிக்சனில் இருந்து தப்பித்த மீரா! சிக்கினாரா சாக்சி?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இந்த வார நாமினேஷனில் அபிராமி, கவின், சேரன், சரவணன், மீராமிதுன் மற்றும் சாக்சி ஆகியோர் உள்ளனர்.

ரோஹித் சர்மாவை மறைமுகமாக தாக்குகிறாரா அனுஷ்கா ஷர்மா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களிடையே பிளவு

சென்னையின் பழம்பெரும் திரையரங்கில் 'நேர் கொண்ட பார்வை

சென்னையின் பழம்பெரும் திரையரங்கம் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ தியேட்டர்.