'வேதாளம்' இசை விழாவில் அஜீத் ரசிகர்களின் சமுதாயப்பணிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
'தல' அஜீத் நடித்து முடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் இணையதளம் மூலம் வெளியானது. ரஜினி, கமல், விஜய் உள்பட மற்ற பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் வெளியீடு ஆர்ப்பாட்டமான விழாவாக நடைபெற்று வரும் நிலையில் அஜீத் நடித்த படங்களின் பாடல்கள் மட்டும் மிக எளிமையாக எந்தவிதமான விழாவும் இன்றி இணையதளங்களில் நேரடியாக வெளியாகி வருகிறது.
அஜீத் படங்களின் பாடல்களை படக்குழுவினர் விழா நடத்தி வெளியிடாவிட்டாலும், அஜீத் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடத்தி வருவதை பார்த்து வருகிறோம். கோவை உள்பட ஒருசில நகரங்களில் திரையரங்குகளில் 'வேதாளம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை அஜீத் ரசிகர்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி மும்பையிலும் 'வேதாளம்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக அஜீத் ரசிகர்களால் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விழாவில் அஜீத் ரசிகர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்களையும் வழங்கியுள்ளனர். இசை வெளியீட்டு விழாவுடன் சமுதாயப்பணிகளையும் செய்து வரும் அஜீத் ரசிகர்களுக்கு சமூக இணையதளங்கள் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com