நீதிமன்ற விசாரணையின்போது திடீரென மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி

  • IndiaGlitz, [Friday,August 04 2017]

சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் எந்த போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் மெரீனாவில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த சமூக ஆர்வலரான டிராபிக் ராமாசமி அனுமதி கேட்டார். ஆனால் அவருக்கு அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டது.,
இதுகுறித்து டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் இருந்து, 'மெரினா கடற்கரை, பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என கூறப்பட்டது.
இந்த நிலையில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது திடீரென டிராபிக் ராமசாமி நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற விசாரணையின்போது டிராபிக் ராமசாமி மயங்கி விழுந்ததால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

More News

ரஜினி குறிப்பிட்ட போர் வந்துவிட்டதா? ரசிகர்களுக்கு வந்த ரகசிய உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது போர் வரும் போது பார்த்து கொள்வோம் என்று முழங்கினார்.

ஓவியா-ஆரவ் லிப்கிஸ் குறும்படத்தை கமல் வெளியிடுவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரியும் ஓவியா-ஆரவ் இடையே நட்பையும் மீறி காதல் உண்டாகிவிட்டது என்று. ஆனால் திடீரென ஆரவ், தான் ஓவியாவை காதலிக்கவில்லை...

கமல்ஹாசனையும் 'கவனிக்க' தொடங்கிய ஓவியா ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மீது பங்கேற்பாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்...

ஓவியா-பிந்துமாதவி குறித்து பரவும் பரபரப்பு வதந்தி

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக நுழைந்து இன்று ஆர்ப்பாட்டமாக காணப்படுவது ஓவியா மட்டுமே...

போராட்டம் செய்யும் விவசாயிகளின் பசியோ போக்கிய குருத்வாரா

தலைநகர் டெல்லியில் 2வது கட்டமாக தமிழக விவசாயிகள் கடந்த 17நாட்களாக போராடி வருகின்றனர்.