நீதிமன்ற விசாரணையின்போது திடீரென மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி

  • IndiaGlitz, [Friday,August 04 2017]

சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் எந்த போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் மெரீனாவில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த சமூக ஆர்வலரான டிராபிக் ராமாசமி அனுமதி கேட்டார். ஆனால் அவருக்கு அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டது.,
இதுகுறித்து டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் இருந்து, 'மெரினா கடற்கரை, பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என கூறப்பட்டது.
இந்த நிலையில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது திடீரென டிராபிக் ராமசாமி நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற விசாரணையின்போது டிராபிக் ராமசாமி மயங்கி விழுந்ததால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது