சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி காலமானார்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமியின் உடல் கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவர் காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தவர் தான் சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி.
சென்ற 4-ஆம் தேதி ராமசாமி ஐயா அவர்களுக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு வீட்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தன்னுடைய 87 வயது வரையும், தளராத முயற்சியால் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக போராடி வந்தவர் இவர் . பொதுநலனில் அக்கறையோடு செயல்பட்டு வந்த இவரின், வாழ்க்கை வரலாறை வைத்து தமிழில் திரைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. சென்ற ஜூன் 22-2018-இல் இயக்குனர் சந்திரசேகர் நடிப்பில் இப்படம் வெளியானது.
கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, இவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவசர சிகிச்சை பிரிவில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ராமசாமி அவர்களின் உடல்நிலை இன்றுகாலை முதலே கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்றுமாலையளவில் இவரின் இன்னுயிர் உடலை விட்டு பிரிந்துள்ளது. சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோர் இவரின் இறப்பிற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments