காவலர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா: சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் காவலர்களுக்கு உணவு, தேநீர் வழங்கி வந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரிடம் உணவு மற்றும் தேநீர் வாங்கிய காவலர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் 200 பேருக்கு உதவி செய்துவந்துள்ள தன்னார்வ இளைஞர் காவலர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் உதவி செய்துள்ளார்.. குறிப்பாக ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ் காவல்நிலைய காவலர்களுக்கும், சென்னையில் சாலையில் வசிப்பவர்களுக்கும் அந்த தன்னார்வலர் உணவு வழங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த தன்னார்வளருக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவரிடம் உணவு வாங்கிய காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தற்போது பரிசோதனைக்கு காத்து கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

More News

கொரோனாவுக்கு நடுவில் மலேரியா பாதிப்பு!!! இரட்டிப்பு தாக்குதலில் ஜிம்பாப்வே!!!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றன.

மே இறுதியில் விடிவுகாலம் கிடைக்கும்: பிரபல நடிகரின் லேட்டஸ்ட் வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலகினர் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வரும் நிலையில் ஏற்கனவே ஒருசில வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு செய்த நடிகர் விவேக் தற்போது

எஸ்வி சேகர் வீட்டில் கெட்டுப்போன பால்: அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் தினமும் 50 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரபாகரன் பெயர் சர்ச்சை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ஆவேச அறிக்கை!

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த 'வரனே அவஷ்யமுண்டு' படம் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியான நிலையில்

பொருட்களின் விற்பனை: பண்டமாற்று முறைக்கு மாற்றிய கொரோனா!!!

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியிருக்கிறது.