10,000 பெண்களுடன் உடலுறவா? சொந்த குரலால் வசமாக சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல நட்சத்திர வீரர் ஒருவரின் வழக்கு தற்போது இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நான் 10,000 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டேன் என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமே கூறியதாகச் சொல்லப்படும் தகவல் உலகம் முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நட்சத்திர கால்பந்து வீரர்களுள் ஒருவராக இருந்துவருபவர் பெஞ்சமின் மெண்டி. இவர் பிரான்ஸ் அணி கடந்த 2018 இல் உலகக்கோப்பையை வென்றபோது அந்த அணிக்காக பெரும் பங்காற்றி இருந்தார். அந்த வகையில் பிரான்ஸ் அணிக்காக 2018-2019 ஆண்டுகளில் விளையாடினார்.
பிரெஞ்சு கிளப்பான மொனாக்கோவில் கடந்த 2017 வரை விளையாடிவந்த பெஞ்சமின் மெண்டி பின்பு இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி கிளப்பில் இணைந்து விளையாடி வந்தார். டிஃபென்டராக இதுவரை அந்த அணிக்காக 75 போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். கடந்த சனிக்கிழமையோடு இவருடைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் அவர் பாலியல் குற்ற வழக்கில் சிக்கியதால் அந்த அணி ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்காமல் இருந்து வருகிறது.
தற்போது 28 வயதான இவர் கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் பிரிட்டன் செஷயரில் உள்ள மேட்ராம் செயின்ட் ஆண்ட்ரூவில் இருக்கும் தனது சொந்த பங்களாவில் வைத்து 24 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அவர் மிரட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 29 வயது பெண் ஒருவரிடம் பெஞ்சமின் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர பல்வேறு குற்றச்சாட்டகள் அவர்மீது வைக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஒரு பாலியல் முயற்சி குற்றச்சாட்டு என இரு வழக்குகள் தற்போது பெஞ்சமின் மிண்டி குறித்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெஞ்சமின் மெண்டியின் இரு வழக்கு விசாரணைகளும் கடந்த ஜனவரி மாதம் பரபரப்பாக நடைபெற்ற நிலையில் 6 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது மீண்டும் விசாரணை சூடுபிடித்திருக்கிறது.
ஆனால் தற்போது பெஞ்சமின் மெண்டியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த 24 வயது பெண் கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதாவது பெஞ்சமின் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தபோது இதெல்லாம் பரவாயில்லை. நான் 10,000 பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தேன் என்று தன்னை மிரட்டி தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த வாக்குமூலம் குறித்து தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதனால் பெஞ்சமின் மெண்டி மீதான வழக்கு மேலும் சிக்கலாகி இருப்பதாகவும் உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments