நம்ம PS- நாயகி வானதிக்கு பிறந்தநாள்... அவருக்குள் இத்தனை திறமையா? ஷாக்கான ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு திட்டமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை சோபிதா துலிபாலா. அவர் இன்று பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவரைப் பற்றி அறிந்த ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய சினிமாவில் ஸ்டைலிஷான நடிகை மற்றும் பேஷன் விஷயத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்துவரும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கு இன்று 31 ஆவது பிறந்த நாள். பல விருது விழாக்களிலும் போட்டோஷுட்களிலும் இவருடைய ஆடைத் தேர்வு எப்போதும் பாராட்டை குவித்து வருவதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல சினிமாவிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலத்தில் பிறந்து விசாகப்பட்டிணத்தில் தனது படிப்பை முடித்தவர்தான் சோபிதா துலிபாலா. பள்ளிப் பருவத்திலேயே பேஷன் மற்றும் நடிப்பு விஷயத்தில் படு ஆர்வம் காட்டிவந்த அவர் கதக்களி, குச்சிப்புடி போன்ற நடனங்களை முறையாக பயின்றுள்ளார். மேலும் கல்லூரி பருவத்திலேயே அழகிப் போட்டிகளில் கலந்துகொள்ள முயற்சித்த அவர் சிறுசிறு போட்டிகளில் பரிசுகளையும் வென்றுள்ளார். தொடர்ந்து ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் படத்தை வென்றார்.
மேலும் இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் எர்த் 2013 போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார். இதையடுத்து பாலிவுட்டில் பிரபல இயக்குநர் அனுராக்காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘ராமன் ராகவ்’ க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர். அதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று பல்வேறு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்தியில் ‘மேட் இன் ஹெவன்‘ திரைப்படத்திலும் மலையாளத்தில் ‘மூத்தோன்‘, ‘குரூப்‘ ஆகிய திரைப்படங்களிலும் தமிழில் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் பேஷன், விளம்பரப் படங்கள், மாடலிங்க் என்று பன்முகத் திறமையுடன் இருந்துவரும் நடிகை சோபிதா துலிபாலாவின் திறமையைப் பாராட்டி 2022 இல் ‘எல்லோ ஜெனரல் இசட் ஸ்டைல் ஐகான்’ விருது வழங்கப்பட்டது.
நடனக் கலைஞர், சூப்பர் மாடல், பேஷன் பியூட்டி என்று பல்வேறு இந்திய சினிமாவில் இளம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com