சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவுடன் காதலா? ஒருவழியா மௌனம் கலைத்த PS-நாயகி!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

நடிகை சமந்தாவைவிட்டு பிரிந்ததில் இருந்தே நடிகர் நாகசைதன்யா பல்வேறு காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்த நிலையில் சமீபகாலமாக அவர் நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவருகிறார் என்று வதந்திகள் வெளியாகி இருந்தன. மேலும் இருவரும் ஒன்றாக இருப்பதுபோன்ற புகைப்படங்களும் அவ்வபோது சமூகவலைத் தளங்களில் பரவிவந்த நிலையில் அதுகுறித்து முதல் முறையாக சோபிதா பதிலளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இருபாகங்களிலும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகை சோபிதா துலிபாலா மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் என்பதும் அவர் ஒரு கிளாசிக்கல் டான்சர் என்பதும் ரசிகர்கள் அறிந்ததுதான். இந்நிலையில் இவர் நடிகர் நாகசைதன்யாவுடன் டேட்டிங் செய்துவருகிறார் என்பதுபோன்ற தகவல்களும் அவ்வபோது சில புகைப்படங்களும் சமூகவலைத் தளங்களில் பரவிவந்தன. இதுகுறித்து இருவருமே எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் தற்போது முதல்முறையாக சோபிதா இதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார்.

ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகை சோபிதா டேட்டிங் செல்கிறீர்களா என்ற கேள்விக்கு அழகான படங்களில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் ஒரு கிளாசிக்கல் டான்சர். எனக்கு நடனம் பிடிக்கும். நடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். அறிவு இல்லாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யாதபோது அது என்னுடைய வேலையில்லை, அதனால் விஷயங்களை விளக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் அரைகுறை அறிவுடன் மக்கள் எதை எழுதினாலும் அதற்கு பதிலளிக்கவோ அல்லது தெளிவுப்படுத்தவோ தேவையில்லை. அதற்குப் பதிலாக உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். அதை மேம்படுத்தி அமைதியாக இருங்கள் மற்றும் நல்ல மனிதராக இருக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

நடிகர் நாகசைதன்யாவுடன் டேட்டிங் செல்கிறீர்களா என்ற கேள்விக்கு நடிகை சோபிதா அளித்துள்ள இந்தப் பதில் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகின்றன.