ஒரு வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் சர்வதேச கிரிக்கெட்… போட்டிகள் குறித்த முழுமையான தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இலங்கை அணியுடனான சுற்றுப் பயணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி விட்டு இந்தியாவிற்கு வந்து இருக்கின்றனர். அதேபோல 33 வருடகால வரலாற்று சாதனையை முறியடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி விட்டு இந்திய அணி தாயகம் திரும்பி உள்ளது. இந்நிலையில் வலிமையான இரண்டு அணிகளும் 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
முதற்கட்டமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இங்-இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங்கை தொடங்கி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றது என்பதாலும் கொரோனாவிற்கு பிறகு இந்திய மண்ணில் நடைபெறும் முதல் சர்வதே கிரிக்கெட் போட்டி என்பதாலும் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கி விட்டனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா மற்றும் சபாஷ் நதீம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இதில் அம்சர் பட்டேல் அணியை விட்டு விலகியதால் சபாஷ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அதேபோல சிராஜ், குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. தற்போது நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 ஸ்பின் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற்று உள்ளனர்.
இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒலி போப், ஜோஸ் பட்லர், டொமினிக் பெஸ், ஆர்ச்சர், ஜாக் லீக், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதன் 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது.
3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்க உள்ளது.
4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையடுத்து அனைத்து டி20 போட்டிகளும் வரும் மார்ச் 12-20 தேதி வரை அகமதாபாத்திலேயே நடைபெற உள்ளது. பின்பு 3 ஒருநாள் போட்டிகள் பூனே மைதானத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout