தங்கமகள் கோமதியின் தாயாருக்கு நடிகை வரலட்சுமி கொடுத்த சிறப்புக்குரிய விருது

  • IndiaGlitz, [Sunday,May 12 2019]

தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கோமதிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் நிதி உதவிகளும் குவிந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோமதியின் தாயாருக்கு நடிகை வரலட்சுமி 'அன்னையர் தினம்' விருதினை அளித்தார். இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தங்கமகள் கோமதியின் தாயாருக்கு அன்னையர் தின விருது அளிப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்று வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கோமதி மற்றும் கோமதியின் தாயார் இருவரையும் கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும் கோமதி இன்னும் பல சாதனைகள் புரிந்து பல பதக்கங்களை வெல்ல வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் நடிகை தன்ஷிகாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

கோமதியின் சாதனை குறித்து நடிகை தன்ஷிகா கூறியபோது, 'கோமதி தனக்கு மட்டும் பெருமை தேடிக்கொள்ளவில்லை. ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்திற்கே பெருமை தேடி தந்துள்ளார் என்று கூறியுள்ளார்.