பீப் பாடல் எதனால் ஹிட் ஆகிறது- சினேகா
- IndiaGlitz, [Sunday,December 20 2015]
சிம்பு -அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து பிரபல நடிகை சினேகாவும் தனது கருத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.
நேற்று கோவையில் அவர் கூறியதாவது: பெண்களை வர்ணிக்கிற பாடலும் உண்டு, அடிடா உதைடா என்று சொல்கிற பாடலும் உண்டு. ஒன்றும் செய்யமுடியாது. ஒரு பாடலைப் பேசிப் பேசித்தான் ஹிட் ஆக்குகிறோம். இதனால்தான் எல்லோரும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பீப் பாடலை நிஜமாகவே நான் கேட்கவில்லை. கேள்வி கேட்டதால், அதில் அப்படி என்ன உள்ளது என்று அப்பாடலைக் கேட்கத் தூண்டியுள்ளீர்கள். இதுதான் ஒரு பாடலை ஹிட் ஆக்குகிறது' என்று கூறியுள்ளார்.