வெற்றி பெறாவிட்டாலும் சொன்ன சொல்லை காப்பாற்றிய சினேகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றால் அந்த பணத்தின் மூலம் பொதுமக்களுக்கு நூலகம் ஒன்றை கட்டித்தர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோதே சினேகன் குறிப்பிட்டிருந்தார்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறாத நிலையிலும் சொன்ன சொல்லை காப்பாற்றும் விதமாக தற்போது தஞ்சை மாவட்டத்தில் நூலகம் ஒன்றை அவர் கட்டி வருவதாகவும் வரும் பிப்ரவரி மாதம் இந்த நூலகம் திறக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நூலகத்தில் தொன்மை கால புத்தகங்கள் முதல் டிஜிட்டல் கால புத்தகங்கள் வரை வடிவமைக்க சினேகன் திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த நூலத்திற்கு ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட ஒருசில நட்சத்திரங்களும் உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com