தேவைதகளுடன் வாழ்ந்த சினேகனுக்கு தேவையா இது?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைகாட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எந்த அளவுக்கு நேயர்களின் சப்போர்ட் இருக்கின்றதோ, அதே அளவுக்கு ஒருசிலரை நேயர்கள் அதிகளவில் வெறுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக சினேகன் உள்ளார் என்பது சமூகவலைத்தள பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் பிக்பாஸ் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உறவுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வேலைக்காரர் என்ற உறவு கவிஞர் சினேகனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்றும் அவர் வேலைக்காரர் கெட்டப்பில் தோன்றுவது போன்றும் ஒரு காட்சி உள்ளது. இதனால் சினேகன் அதிர்ச்சி அடைந்ததாகவும், அந்த வீடியோவில் கூறப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தமிழகத்தில் உள்ள கவிஞர்களிலே அதிக கேர்ள் பிரண்டு உள்ளவர் நான் தான் என்றும், தான் தேவதைகளுடன் வாழ்ந்தவர் என்றும் சினேகன் கூறினார். தேவதைகளுடன் வாழ்ந்த சினேகன் நிலை தற்போது இப்படி ஆகிவிட்டதாக டுவிட்டர் பயனாளிகள் மிமியை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com