close
Choose your channels

ஓவியாவை அடுத்து பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிக்பாஸ் பிரபலம்

Tuesday, July 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளன்று முதல் பாகத்தில் கலந்து கொண்ட ஓவியா, பிக்பாஸ் வீட்டில் ஒருசில மணி நேரங்கள் இருந்து கலகலப்பூட்டினார். அந்த வகையில் ஓவியாவை அடுத்து கவிஞர் சினேகன் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் காட்சி இன்றைய புரமோ வீடியோவில் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது விறுவிறுப்பாக்க வேண்டும் என்று ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் அவர்களது முயற்சிக்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை

இந்த நிலையில் இந்த வார டாஸ்க்காக பிக்பாஸ் பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதில் போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாக நடித்து வருகின்றனர். ஏற்கனவே போட்டியாளர்களாக நடித்து வருபவர்களுக்கு மாணவர்களாக நடிப்பது ஒன்றும் கஷ்டமாக இருக்காது என்றே தோன்றுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் பள்ளியின் ஆசிரியராக கவிஞர் சினேகன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரை பிக்பாஸ் பள்ளியின் மாணவர்கள் வரவேற்கின்றனர். பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு 'அனைவரும் சாப்பிடும்போது மட்டுமாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள்' என்று சினேகன் அறிவுரை கூறுவதோடு இந்த புரமோ வீடியோ முடிவடைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment