காதலர் தினத்தில் கணவருக்கு மெட்டி அணிவித்த தமிழ் நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்று கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி என்பது தெரிந்ததே. கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி சினேகன் - கன்னிகா திருமணம் நடைபெற்றது என்பதும் உலகநாயகன் கமலஹாசன், இயக்குனர் இமயம் பாரதிராஜா உட்பட பல திரையுலக பிரமுகர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சினேகன் மற்றும் கன்னிகா தங்களது சமூக வலைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் என்ற நிலையில் தற்போது காதலர் தின சிறப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்
இருவரும் ஒரே டிசைனில் உருவாக்கப்பட்ட காஸ்டியூம்களை அணிந்து எடுக்கப்பட்டு உள்ள போட்டோ சூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. மேலும் இருவரும் நகை கடைக்கு இணைந்து சென்றது, கன்னிகா ரவி மெட்டி வாங்கி அதை அவர் தனது கணவர் சினேகனுக்கு மாட்டிவிடும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்ஸ்களி குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout