close
Choose your channels

தலைப்பொங்கல் கொண்டாடிய சினேகன் - கன்னிகா ரவி: வைரல் புகைப்படங்கள்!

Friday, January 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சினேகன் மற்றும் கன்னிகா ரவி தலைப்பொங்கல் கொண்டாடியதன் புகைப்படங்கள் அவர்களுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் பாடலாசிரியர் மற்றும் நடிகருமான சினேகன், நடிகை கன்னிகா ரவியை கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கமல்ஹாசன், பாரதிராஜா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு சினேகன் கவிதைக்கு-கன்னிகா ரவி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சினேகன் - கன்னிகா ரவி திருமணத்திற்கு பின் வரும் முதல் பொங்கல் இன்றைய தினம் என்பதால் அவர்கள் தங்களுடைய தலைப்பொங்கலை கொண்டாடுகின்றனர். இது குறித்த புகைப்படங்களை சினேகன் மற்றும் கன்னிகா ரவியின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகன் தற்போது அருண்விஜய் நடித்து முடித்துள்ள ’யானை’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment