நாங்க அப்பா அம்மா ஆகபோறோம்... பிரபல நட்சத்திர ஜோடி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடி, நாங்கள் "அம்மா அப்பா" ஆக போகிறோம். உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டுமென்று, தங்களது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் சினேகன், நடிகை கன்னிகா ரவியை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள், இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.
திருமணம் கடந்த பிறகு, சினேகன்-கன்னிகா ஜோடி சமூக வலைதளங்களில் பிரபலமானது. சமீபத்தில், சொந்த பிசினஸ் தொடங்கியதாக அறிவித்த சினேகன்-கன்னிகா ஜோடி, அதற்கு தொடர்பான பல்வேறு புகைப்படங்களையும் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், சற்றுமுன், சினேகன்-கன்னிகா தங்களது சமூக வலைதளத்தில் "நாங்கள் அம்மா அப்பா ஆக போகிறோம். உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com