சினேகன் - கன்னிகா தொடங்கிய புது பிசினஸ்.. நயன்தாராவுக்கு போட்டியா?

  • IndiaGlitz, [Wednesday,May 01 2024]

நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அழகு பொருட்கள் விற்பனை பிசினஸ் தொடங்கிய நிலையில் அதே போல கவிஞர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு புதிய பிசினஸை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

தமிழ் திரையுலகின் முன்னணி பாடல் ஆசிரியரான சிநேகன் கடந்த 25 ஆண்டுகளாக ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதி வருகிறார் என்பதும் அவரது பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் பாடலாசிரியர் சினேகன், நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவ்வப்போது தம்பதியாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சினேகன் இருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள் என்பதும் அது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சினேகன் மற்றும் கன்னிகா இணைந்து ஒரு புதிய பிசினஸ் தொடங்கியுள்ளனர். தலைக்கு தேய்க்கும் மூலிகை எண்ணெய் உற்பத்தி செய்வதாக கூறியுள்ள சினேகன் இது குறித்து அவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது:

சிநேகம் மூலிகை ஹேர் ஆயில் அறிமுகப்படுத்துகிறோம். இயற்கையான முடி பராமரிப்பு தீர்வுகளுக்கான உங்கள் இலக்கு இதுதான். செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்காக மருத்துவரீதியில் பரிசோதிக்கப்பட்ட எங்களின் முதன்மை தயாரிப்பு சினேகம் ஹெர்பல் ஹேர் ஆயில். இதன் மூலம் ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தல் பெறலாம். உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தை மாற்றும் ரகசியம் இதுதான் என பதிவு செய்துள்ளனர்.

More News

ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி 2024-2025: திருமணம், அதிர்ஷ்டம், வேலை பற்றிய நம்பிக்கை தரும் தகவல்கள்!

ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி 2024-2025: திருமணம், அதிர்ஷ்டம், வேலை பற்றிய நம்பிக்கை தரும் தகவல்கள்!

மேஷ ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் குரு பெயர்ச்சி பலன்கள் - ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் தளத்தில் ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!

குரு பெயர்ச்சி 2024 முதல் 2025 வரையிலான பலன்களை பற்றி, பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் தளத்தில் விரிவாக விளக்கியுள்ளார். இதில்,

அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த விலை உயர்ந்த பரிசு.. இத்தனை லட்சம் மதிப்பா?

நடிகர் அஜித் இன்று தனது 53 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

ரஜினிகாந்த் பயோபிக் படம் உருவாகிறதா? ரஜினி கேரக்டரில் யார் நடிப்பார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயோபிக் திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஜினி கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு

ரஜினியின் 'கூலி' பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'கூலி' படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா திடீரென நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.