இவர் தான் நடிகை சினேகாவின் சகோதர்களா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

இன்று உலகம் முழுவதும் சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதையும் தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்பட இந்திய திரை உலக பிரபலங்கள் பலர் தங்களுடைய சகோதரர்களின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை சினேகாவும் தனது சகோதரர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் சினேகா, சினேகாவின் இரண்டு சகோதரர்களான பாலாஜி நாயுடு மற்றும் கோவிந்த் நாயுடு மற்றும் சினேகாவின் குழந்தைகள் உள்ளனர். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக சினேகா, ‘உங்களுக்கு தேவைப்படும் போது எங்கோ இருக்கும் ஒருவர், நீங்கள் விழும் போது உங்களை தாங்கி பிடிக்கவும், நீங்கள் கேட்காவிட்டாலும் உங்களுக்காக வரும் ஒருவர் சகோதரர். அவர் எப்போதும் சிறந்த தோழர். இனிய சகோதரர் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

 

கடந்த 2000ம் ஆண்டு ’என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சினேகா அதன்பிறகு விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார் என்பது திருமணத்திற்கு எனது நடிப்பை குறைத்துக் கொண்டாலும் ’வேலைக்காரன்’ பட்டாஸ் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும்  ’வான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

'மீடூ' குறித்து சற்றுமுன் ஓவியா பதிவு செய்த டுவிட்!

பிரபல தமிழ் நடிகையான ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்குப் பின்னரே ரசிகர்களின் பேராதரவை பெற்றார் என்பதும் அவருக்குத் தான் முதன்முதலாக ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்தனர்

புதிய முயற்சியில் தமிழக அரசு....! ரூ.105-க்கு இத்தனை காய்கறிகளா...?

10 காய்கறிகள் ஒரு தொகுப்பானது கூட்டுறவுத்துறை சார்பில், 105 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

கணவரை கன்னத்தில் அடித்த தமிழ் நடிகை: நீங்களும் செய்து பார்க்க கூறிய அறிவுரை!

தமிழ் நடிகை ஒருவர் தனது கணவரின் கன்னத்தில் அடித்துவிட்டு வீட்டில் எல்லோரும் இதை செய்து பாருங்கள் என தெரிவித்திருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

கோவிட் சென்ட்ரை சுத்தமாக மாற்றிய, இளம் பத்திரிக்கையாளர் மரணம்...!

சென்னையைச் சேர்ந்த இளம் செய்தியாளர்  கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்

இந்த புகைப்படத்தில் மூன்று பிரபல நடிகர்கள் உள்ளனர்: யார் யார் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த தினத்தின் போது சகோதரர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு