கமல் கட்சியில் இணைந்த மோடியின் டுவிட்டர் கணக்கை நிர்வகித்த பெண்!

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை ஒரே ஒரு நாள் மட்டும் நிர்வகித்த பெண் இன்று கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்ட போது தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன் தாஸ் என்பவர் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை ஒரு நாள் மட்டும் நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதரவற்றவர்களுக்காக ‘ஃபுட் பேங்க் இந்தியா’ என்ற அமைப்பை நடத்தி வரும் சினேகா மோகன்தாஸ் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

கமல் கட்சியில் சேர்ந்த இவருக்கு சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சினேகா மோகன்தாஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும், மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி .