ஜெயம் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த புன்னகை அரசி

  • IndiaGlitz, [Wednesday,August 31 2016]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் ரிலிஸ் தேதியை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயம் ராஜா இயக்கவுள்ள சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக பஹத் பாசிலும் நடிக்கவுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது 'புன்னகை அரசி' என்று போற்றப்படும் சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். குழந்தை பிறந்தவுடன் சமீபகாலமாக திரையுலகில் இருந்து விலகியிருந்த சினேகா தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினியாக இருந்தாலும் சினேகாவுக்கு இந்த படத்தில் கதையுடன் ஒன்றிப்போகும் அளவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும் அவருடைய கேரக்டர்தான் கதையை நகர்த்தி செல்லும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.
24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

ரஜினி, கமல், விஜய் இடத்திற்கு மகேஷ்பாபுவை அழைத்து செல்லும் முருகதாஸ்

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும் தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை இயக்கியவருமான ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

சமீபத்தில் தனுஷ் ஒரு மிகப்பெரிய செய்தியை வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிப்பதில் பெருமை அடைகிறேன்...

சீயான் விக்ரமின் 'இருமுகன்' ரன்னிங் டைம்

விக்ரம், நயன்தாரா நடிப்பில் அரிமாநம்பி பட இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...

ரஜினி-விஜய் திருமணங்களில் ஒரு அபூர்வ ஒற்றுமை

ஒரு நடிகருக்கு நான்கு தலைமுறைகள் ரசிகர்களாக இருக்கின்றனர் என்றால் அதைவிட வேறு ஏதாவது ஒரு பெருமை வேண்டுமா? அத்தகைய பெருமையை பெற்றிருப்பவர்...

அதிமுகவில் இணைந்தாரா நயன்தாரா?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாரா, விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், அவர் அதிமுகவை...