கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டேன்: 10வது திருமண நாள் விழாவில் சினேகாவின் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து 10 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து ரொமான்ஸ் பதிவும், கலக்கலான புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் இவர்களது குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே .
இந்த நிலையில் சினேகா - பிரசன்னா திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து கணவர் பிரசன்னாவுக்கு ரொமான்ஸ் ஒன்றை பதிவு சினேகா செய்துள்ளார். அதில் ’இது எங்களது பத்தாவது திருமண ஆண்டு. எங்களது இந்த பத்தாண்டு பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டோம், கருத்து வேறுபாடுகளும் எங்களுக்குள் இருந்தது. நான் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றையும் மீறி விட்டேன். உங்கள் இதயத்தையும் சிலசமயம் உடைத்துவிட்டேன் .
ஆனால் நீங்கள் எப்போதும் என்னிடம் அன்பு காட்டி வருகிறீர்கள். உங்கள் அன்பினால் என்னை மீண்டும் மீண்டும் வென்றீர்கள். உங்கள் அன்பை விட தூய்மையானது இந்த உலகில் வேறு எதுவுமே இருக்க முடியாது. நீங்கள் என் இதயத்தையும் ஆன்மாவையும் முழுமையாக நிரம்பிவிட்டீர்கள், லவ் யூ கண்ணம்மா! என்று பதிவு செய்துள்ளார். இந்த ரொமான்ஸ் பதிவும் க்யூட் புகைப்படங்களும் வைரல் ஆகி விடுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com