close
Choose your channels

வானவில் மாயாஜாலத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய சினேகா.. அழகிய புகைப்படங்கள்!

Wednesday, October 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை சினேகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2000ம் ஆண்டு ’என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சினேகா, அதன் பின்னர் கமல், விஜய், சூர்யா, பிரசாந்த், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பதும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு சில படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது குடும்பத்துடன் கூடிய புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதியான இன்று சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தனது கணவருடன் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அழகிய மாயாஜாலத்துடன் கூடிய வானவில்லின் பின்னணியில் கணவருடன் மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடி வரும் சினேகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment