வானவில் மாயாஜாலத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய சினேகா.. அழகிய புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,October 12 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை சினேகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2000ம் ஆண்டு ’என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சினேகா, அதன் பின்னர் கமல், விஜய், சூர்யா, பிரசாந்த், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பதும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு சில படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது குடும்பத்துடன் கூடிய புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதியான இன்று சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தனது கணவருடன் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அழகிய மாயாஜாலத்துடன் கூடிய வானவில்லின் பின்னணியில் கணவருடன் மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடி வரும் சினேகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

தமிழகத்தில் எம்.எஸ்.தோனிக்கு சொந்த பள்ளி.. மாணவர்கள் வரவேற்பால் நெகிழ்ச்சி!

தல தோனிக்கு தமிழகத்தில் சொந்த பள்ளி இருக்கும் நிலையில் அந்த பள்ளிக்கு வருகை தந்த அவரை மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். 

புதிய கார் வாங்கிய பூவையார்: குவியும் வாழ்த்துக்கள்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய், சியான் விக்ரம் படங்கள் உள்பட சில படங்களில் நடித்த பூவையார் தற்போது சொந்த கார் வாங்கி உள்ளதாக

மைனா நந்தினி கணவருக்கு ஜோடியாகும் சுனிதா: புதிய அறிவிப்பு!

விஜய் டிவி பிரபலம் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் நடிக்கும் திரைப்படத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சுனிதா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'உங்க ஆட்டம் தப்பு'.. இரண்டாவது நாளே சண்டைக்கு கிளம்பிய ஜிபி முத்து!

 எனது கணவர் சண்டை போட மாட்டார், ஜெயித்து விட்டு வருவார் என ஜிபி முத்துவின் மனைவி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நிலையில் இரண்டாவது நாளே ஜிபி முத்து சண்டை போட ஆரம்பித்து உள்ளது

முட்டாள்கள்: நயன்தாராவின் வாடகைத்தாய் சர்ச்சை குறித்து வனிதா விஜயகுமார்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருக்கும் நிலையில் இது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.