வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா-பிரசன்னாவின் க்யூட் போட்டோஷூட்!

தமிழ் திரை உலகின் நட்சத்திர க்யூட் ஜோடியான சினேகா-பிரசன்னா பிரிய போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பிய நிலையில் அந்த வதந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சினேகா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா என்பதும் இவர் கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்பத்தின் புகைப்படங்களை சினேகா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில் திடீரென சினேகா-பிரசன்னா இருவரும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பின.

இந்த வதந்திக்கு ஏற்கனவே சினேகா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது க்யூட்டான போட்டோஷுட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளன. இந்த போட்டோஷூட்டில் இருவரும் நெருக்கமாக ஸ்டைலிஷ் காஸ்ட்யூமில் ரொமான்ஸ் போஸ் கொடுத்து இருக்கும் நிலையில் இந்த போட்டோஷூட் வதந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.