அடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிய ‘பட்டாஸ் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்தை தனுஷ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் தந்தை தனுஷின் திரைவியம் பெருமாள் கேரக்டர் மூலம் அடிமுறை கலை குறித்த விழிப்புணர்வு தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷை அடுத்து இந்த படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு கேரக்டர் என்றால் அது சினேகா நடித்த கேரக்டர் தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். இந்த படத்தில் தனுஷுக்கு இணையாக அடிமுறை கலையை சினேகா வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சிகள் பல என்பது படக்குழுவினருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.
இந்த நிலையில் தற்போது அடிமுறை கலையை சினேகா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பயிற்சியாளர் சொல்வது போலவே அடிமுறை பயிற்சியை சினேகா செய்யும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவை பார்க்கும் போது அவர் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த படத்தில் ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் என்பது புரியவரும்.
Here u go for an Adimurai Practice video of @actress_Sneha .#SnehaAdimuraiPractice @Prasanna_actor @johnmediamanagr pic.twitter.com/sICnYHchOq
— meenakshisundaram (@meenakshicinema) January 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments