ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்கிறதாம் சூர்யாவின் '24' டீசர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள '24' படத்தின் டீசர் இவ்வார இறுதியில் வெளிவரும் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த டீசர் சுமார் ஒரு நிமிடம் ஓடுவதாகவும், இந்த டீசர் ஏ.ஆர்.ரஹ்மானின் அபாரமான பின்னணி இசையாலும், அதிர வைக்கும் காட்சிகளின் எடிட்டிங்கிலும் அமைந்துள்ளதாகவும் டீசரை பார்த்த படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சூர்யா இந்த படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில், ஐந்து வித்தியாசமான கெட்டப்புகளில் அவர் இந்த டீசரில் தோன்றுவதாகவும், இது சூர்யாவின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவரையுமே ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்லக்கூடிய ஒரு விஷயமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இவ்வார இறுதியில் டீசர் வெளியாவதை அடுத்து இசைப்புயல் ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியீடு விழாவை இம்மாத இறுதியில் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சமந்தா மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com