32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திரமாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழைத் தொழிலாளி சுப்பிரமணியம். இவருடைய 5 வயதில் முதல் முறையாக பாம்பு கடித்தது எனக் கூறுகிறார். அதற்காக தீவிரச் சிகிச்சைபெற்று உயிர் தப்பினாராம். ஆனால் அப்படி ஆரம்பித்த பாம்புக்கடி கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
அதாவது சுப்பிரமணியம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வந்தால் கூட அங்கு நல்ல பாம்புகள் வந்து விடுமாம். அசந்தால் கடிதான். இப்படியே 74 முறை பாம்புக் கடி வாங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று உயிர் வாழ்ந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் ஆயிரக் கணக்கில் செலவாகிறது எனவும் கூறுகிறார். இதனால் வீட்டை விட்டு வெளியே வரவும் பயந்து கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார்.
கூலித்தொழில் செய்து வாழ்ந்து வரும் இவர் பாம்பு கடிக்கு பயந்து பெங்களூர் பகுதிக்கும் குடிபெயர்ந்து இருக்கிறார். ஆனால் அங்கும் பாம்பு வந்து கடித்தால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி விட்டாராம். ஏன் இவரை மட்டும் தொடர்ந்து பாம்புகள் கடித்து வருகின்றன என்பது குறித்து தெளிவான விளக்கம் எதுவும் தெரியாத நிலையில் ஜோசியம், குறி கேட்பது, பரிகாரம் செய்வது போன்றவற்றையும் இவர் முயற்சி செய்து பார்த்து இருக்கிறார். ஆனால் பலன் எதுவும் இல்லை என்றே கூறுகிறார்.
மேலும் கூலி வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் இவர் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த பலரும் ஒருவேளை பாம்பு குறிவைத்து தாக்கும் என்பது உண்மையாக இருக்குமோ? எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments