சேப்பாக்கம் மைதானத்தில் பாம்புகள்: வேல்முருகன் திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணியினர்களுக்கு இடையிலான போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் பாம்புகள் விடப்படலாம் என தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளது அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கான நாகப்பாம்புகளை மலையில் இருந்து பிடித்து வந்து சேப்பாக்கம் மைதானத்தில் விட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த பாம்பை பிடிக்க போலீசாரும், விளையாட்டு வீரர்களூம் ஆடும் விளையாட்டை நாங்கள் வேடிக்கை பார்க்க உள்ளதாகவும் வேல்முருகன் கூறியுள்ளார்.

இந்த தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக கூறிய வேல்முருகன், மைதானத்திற்குள் பாம்புகளை கொண்டு செல்ல கூடாது என்று மைதான 

நிர்வாகிகள் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேல்முருகனின் இந்த தகவலை அடுத்து போட்டியை காண செல்லலாம் என்ற ஒருசிலரின் திட்டங்களிலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழகத்தில் கோடை மழை! வெதர்மேன் என்ன சொல்கிறார்

கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடைமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷாலும் மற்றும் புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றதில் இருந்தே பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்

ரசிக்க போறியா..? தவிர்க்க போறியா..?? ஐபிஎல் குறித்து ஜிவி பிரகாஷின் ஆவேச டுவீட்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதான் என்னுடைய பிரம்மாஸ்திரம்: ஸ்ரீரெட்டி பேட்டியால் அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.

சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாளை என்னென்ன கொண்டு செல்ல கூடாது?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு பெரும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.