சேப்பாக்கம் மைதானத்தில் பாம்புகள்: வேல்முருகன் திடுக்கிடும் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணியினர்களுக்கு இடையிலான போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் பாம்புகள் விடப்படலாம் என தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளது அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.
மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கான நாகப்பாம்புகளை மலையில் இருந்து பிடித்து வந்து சேப்பாக்கம் மைதானத்தில் விட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த பாம்பை பிடிக்க போலீசாரும், விளையாட்டு வீரர்களூம் ஆடும் விளையாட்டை நாங்கள் வேடிக்கை பார்க்க உள்ளதாகவும் வேல்முருகன் கூறியுள்ளார்.
இந்த தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக கூறிய வேல்முருகன், மைதானத்திற்குள் பாம்புகளை கொண்டு செல்ல கூடாது என்று மைதான
நிர்வாகிகள் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேல்முருகனின் இந்த தகவலை அடுத்து போட்டியை காண செல்லலாம் என்ற ஒருசிலரின் திட்டங்களிலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments