இதையும் விட்டுவைக்கலையா? பாம்புடன் ஒரு Pre-Wedding போட்டோஷுட் நடத்திய ஜோடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணம் செய்துகொள்ள இருக்கும் சிலர் தங்களது காதல் மற்றும் திருமணத்திற்கு முந்தைய நினைவுகளை சேகரித்து வைப்பதற்காக போட்டோஷுட் நடத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் பாம்புடன் போட்டோஷுட் நடத்திய காதல் ஜோடி குறித்த தகவல் இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
திருமணம் என்றாலே ஆயிரம் கனவுகள் அடங்கியிருக்கும். அதுவும் காதல் ஜோடிகளுக்கு சொல்லவே தேவையில்லை. இப்படி திருமணம் செய்துகொள்ள இருக்கும் காதலர்கள் மற்றும் தம்பதிகள் சிலர் திருமணத்திற்கு முன்பாக அழகான தங்களது நினைவுகளை பதிவு செய்து வைப்பதற்காக போட்டோஷுட் நடத்தி வருகின்றனர். அதுவும் சமீபகாலமாக திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட் எடுக்கும் வழக்கம் அதிகரித்து விட்டது.
இதற்காக அழகான இடங்கள், வித்தியாசமான கருதுகோள், மேடை அமைப்புகள் இயற்கை சார்ந்த விஷயங்கள் என்று பல திருமணத் தம்பதிகள் அலைந்து திரிவதைப் பார்க்க முடிகிறது. இன்னும் சிலர் கவர்ச்சியான போட்டோஷுட்டை நடத்தி இணையத்தை அலறவிட்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது.
இந்நிலையில் உண்மையான பாம்பை வைத்து ஒரு திருமணத் தம்பதிகள் போட்டோஷுட் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. காரணம் மணப்பெண் தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்குவந்த ஒரு பாம்பை பார்த்து பயந்தாராம். இதனால் பாம்பு பிடிக்கும் வீரர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்தப் பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார். இந்தச் சம்பவத்தின்போது பாம்பு பிடிப்பதற்காக வந்த பாம்பு பிடி வீரருடன் அந்தப் பெண்ணிற்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து தொலைபேசியிலேயே தங்களது காதலை வளர்த்த இந்தக் காதலர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். மேலும் திருமணத்திற்கு முன்பு எடுத்துக்கொள்ளும் போட்டோஷுட்டின் போது தங்களது காதல் கதையை பிரதிபலிக்கும் வண்ணம் பாம்பை வைத்து போட்டோஷுட் நடத்தியுள்ளனர். இந்தப் போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி விமர்சனத்திற்கு ஆளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com