டசன் கணக்கில் பாம்புகள்… உடம்பு முழுக்க ஊர விட்டு மசாஜ்… இப்படி ஒரு புதுவரவா???
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ் , தாய் மசாஜ், ஸ்வீடிஷ் மசாஜ் எனப் பல வகையான மசாஜ்களை கேள்விப் பட்டு இருப்போம். ஆனால் எகிப்து நாட்டில் தற்போது புது வரவாக ஒரு மாசஜ் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அதுதான் பாம்பு மசாஜ். பெயரைக் கேட்கும்போதே அச்சத்தோடு சிறிது குமட்டலும் சேர்த்துக் கொண்டு வரலாம். ஆனால் இந்த மசாஜ் செய்து கொண்டால் உடலில் உள்ள வலியெல்லாம் காணாமல் போகும் என்கின்றனர்.
எகிப்து நாட்டின் கொய்ரோ நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் புதுவரவாக பாம்பு மசாஜ் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த மசாஜிற்காக டசன் கணக்கில் பாம்புகளை அள்ளி உடம்பு மேல் வைக்கின்றனர். ஒருவேளை இந்த பாம்பு கடித்து விட்டால் என்னவாகும் என்ற சந்தேகம் வரலாம். அதற்கு கூலாக பதில் அளிக்கும் மசாஜ் சென்டர் ஊழியர்கள் பாம்பு கடித்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. அனைத்துப் பாம்புகளும் விஷத்தன்மை அற்றவை. அதனால் பயமில்லாமல் மசாஜ் செய்து கொள்ளலாம் எனக் கூறுகின்றனர்.
மேலும் இந்த மசாஜில் மலைப் பாம்பு முதல் சாரைப் பாம்பு வரை விதவிதமான பாம்புகள் இருக்கும். அதோடு உச்சம் கால் முதல் உச்சம் தலைவரை பாம்புகளை உடலில் ஊர விடுவார்களாம். 20-30 நிமிட பாம்பு ஊரலில் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த வலியும் காணாமல் போய்விடுமாம். இந்த மசாஜ்க்கு இந்திய மதிப்பில் ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பாட்டிக் குளியல், எண்ணெய் தேய்த்து குளியல், அருவி குளியல்… இதெல்லாம் மறந்து விட்ட நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com