close
Choose your channels

18 ஆண்டுகளுக்கு பின் சினேகன் செய்த அதிர்ச்சி செயல்.. வீட்டை விட்டு வெளியே துரத்திய கன்னிகா..

Sunday, July 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

18 ஆண்டுகளுக்கு பின்னர் சினேகன் செய்த அதிர்ச்சி செயலால் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை அவரது மனைவி கன்னிகா பூட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா திருமணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்பதும் கமல்ஹாசன் தான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சினேகன் மற்றும் கன்னிகா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சற்றுமுன் கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகனை வெளியே தள்ளிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதாவது 18 ஆண்டுகளுக்கு பிறகு சினேகன் தனது தாடியை எடுத்து கிளீன் ஷேவ் செய்து வந்த நிலையில் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்னிகா செல்ல கோபத்துடன் அவரை வெளியே தள்ளிய காட்சி அந்த வீடியோவில் உள்ளன.

10 ஆண்டுகளுக்கு பிறகு நான் அவரை தாடி இல்லாமல் பார்க்கிறேன் என்றும், ஆனால் அதே நேரத்தில் இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்றும், அது என்ன என்பதை இன்னும் ஒரு சில நாட்களில் தெரிய வரும் என்றும் கன்னிகா கூறியுள்ளார். அனேகமாக ஒரு புதிய திரைப்படத்தில் சினேகன் நடிப்பதற்காக தாடியை எடுத்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தாடியை எடுத்தாலும் சினேகன் அழகாக தான் இருக்கிறார் என்றும் இப்படி ஒரு அன்னியோன்யமான கணவன் மனைவியை நாங்கள் பார்த்ததில்லை என்றும் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment