மலக்குடலில் வைத்து 5 கிலோ தங்கம் கடத்தல்? அதிர்ச்சி சம்பவம்!
- IndiaGlitz, [Friday,February 12 2021]
கோவை சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிலர் மலக்குடலில் வைத்து தங்கம் கடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கடத்தலில் தங்கம் பேஸ்ட் ஆக மாற்றப்பட்டு, அதைப் பின்பு கேப்சூலாக வடிவமைத்து இருக்கின்றனர். இந்த கேப்சூல்களை வாய்வழியாக சாப்பிட்டு அதை மலக்குடலில் அடக்கிக் கொண்டு தங்கத்தைக் கடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சார்ஷாவில் இருந்து வந்த ஏர் அரேபிய விமானத்தில் இருந்து சிவகங்கை, திருச்சி, சென்னை மற்றும் ராமநாதப்புரத்தை சேர்ந்த 5 கோவை வந்து உள்ளனர். இவர்களில் ஒருவர் பதற்றமாக இருந்ததைப் பார்த்து அவர்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் 5 பேர் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதில் ஒருவர் 324 கிராம் கொண்ட தங்கத்தை 28 கேப்சூல்களாக சாப்பிட்டுக் கடத்தி வந்து இருக்கிறார். அதேபோல மற்ற 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஒட்டுமொத்தமாக 25.74 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு 2.85 கோடி எனவும் மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தக் கடத்தலை அடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இதன் மூளையாக இருந்து செயல்பட்டது யார் என்பதைக் குறித்த விசாரணையைத் தற்போது வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.