ஸ்மித், வார்னருக்கு ஒராண்டு தடை: ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாது
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் கையும் களவுமாக பிடிபட்டதால் அதற்கு காரணமான கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர்களின் பதவிகள் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் ராயல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தும், சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னரும் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும் பந்தை சேதப்படுத்திய பென்கிராப்டுக்கு 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை காரணமாக ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மற்றும் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் தொடரிலும் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments