ஸ்மித், வார்னருக்கு ஒராண்டு தடை: ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாது

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் கையும் களவுமாக பிடிபட்டதால் அதற்கு காரணமான கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர்களின் பதவிகள் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் ராயல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தும், சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னரும் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும் பந்தை சேதப்படுத்திய பென்கிராப்டுக்கு 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மற்றும் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் தொடரிலும் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை திருட்டு

பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி. இவருடைய சகோதரர் நாகராஜ் என்பவர் சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். கிரகலட்சுமிக்கு என தனி அறை நாகராஜ் வீட்டின் எதிரே உள்ளது.

விவசாயி ஆகவே மாறிவிட்ட கார்த்தி

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி, ஒரு விவசாயி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தினகரனின் குக்கர் சின்னத்திற்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்

டிடிவி தினகரன், சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்தார்

புலம்புவதை விட்டு விட்டு ஆம்பளையா இருக்க பழகு - கெளதம்மேனன்

'துருவங்கள் 16' என்ற படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கும் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு நன்றி கூறிய 'பாகுபலி 'இயக்குனர்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்கள் உலகின் கவனத்தை தென்னிந்தியா பக்கம் திரும்ப வைத்தன