எனக்கு இப்போ சாப்பாடு வரணும்.. சீரியஸான கேப்டன்.. 'சாப்பாடு Come' கேலி செய்யும் பூர்ணிமா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அனைத்து போட்டியாளர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த சீசனில் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள் என இரு அணியாக பிரிந்து சண்டை போடுகின்றனர்.
குறிப்பாக சமையல் உட்பட அனைத்து வேலைகளையும் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் தான் செய்ய வேண்டும் என்பதால் சாப்பாடு விஷயத்தில் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் கெடுபிடி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரம் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் திடீரென சமையல் செய்யாமல் வேலை நிறுத்தம் செய்ததால் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள் பட்டினியாக இருந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென கேப்டன் யுகேந்திரனுக்கு சாப்பாடு கொடுக்க முடியாது என ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் போர்க்கொடி தூக்க யுகேந்திரன் டென்ஷன் ஆகிறார்.
எனக்கு இன்னும் சில நிமிடங்களில் சாப்பாடு வரணும் என்று அவர் உத்தரவு போட உடனே பூர்ணிமா கேலியாக ‘சாப்பாடு கம்’ என்று கூறுவது அவரை மேலும் டென்ஷன் ஆக்கி உள்ளது.
நான் வந்து விளையாட்டுக்கு சொல்லவில்லை, சீரியசாக சொல்கிறேன், மற்றவர்களை குத்தும்படி சிரிக்காதீர்கள் என்று யுகேந்திரன் சொல்ல ’நீங்கள் மற்றவர்களை குத்தும்படி செயல்படாதீர்கள்’ என்று பூர்ணிமா பதிலடி கொடுக்கிறார். அப்போது மாயா ’ரொம்ப பயமா இருக்கு என்று கேலியாக சிரிப்பது யுகேந்திரனை மேலும் டென்ஷன் ஆக்கியுள்ளது.
#Day19 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 20, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/ElY6bcbKLg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout