பிரபல நடிகையின் தாத்தா காங்கிரசில் இருந்து திடீர் விலகல்

  • IndiaGlitz, [Sunday,January 29 2017]

முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மகாராஷ்டிரா மாநில கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். மேலும் அவர் காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கர்நாடகா காங்கிரஸில் சமீபகாலமாக எஸ்.எம். கிருஷ்ணா ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், இதனால் அவர் கடந்த சில மாதங்களாக கடும் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து மட்டுமின்றி தீவிர அரசியலில் இருந்தும் ஓய்வு பெற எஸ்.எம். கிருஷ்ணா முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தம்மை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

எஸ்.எம்.கிருஷ்ணா பிரபல தமிழ், கன்னட நடிகை 'குத்து' ரம்யாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நான் என்ன தவறு செய்தேன்? கமல்ஹாசனின் வேதனை டுவீட்

மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த போராட்டத்தில் சினிமாக்காரர்கள் நுழைந்து பெயர் தேட வேண்டாம் என்றும், போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியபோது தைரியமாக அதை தட்டிக்கேட்டதும் கமல்ஹாசன் மட்டுமே...

புதிய போராட்டமா? மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் சென்னை மெரீனாவில் நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் உலக தமிழர்களை எழுச்சி அடைய செய்தது. அதுமட்டுமின்றி இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் சட்டம் அமலுக்கு வந்தது...

மக்கள் பணத்தை கொள்ளையடிக்க உதவி செய்யுங்கள். வேட்பாளரின் நூதன கோரிக்கை

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்துவிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன...

சூர்யாவுக்கு பீட்டா அனுப்பிய மன்னிப்பு + அறிவுரை கடிதம்.

நடிகர் சூர்யா, தனது 'சி3' படத்தின் புரமோஷனுக்காக ஜல்லிக்கட்டு விஷயத்தை பயன்படுத்துகிறார் என்று பீட்டா அமைப்பு குற்றஞ்சாட்டியதற்கு கடந்த வாரம் சூர்யா, வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் பீட்டா அமைப்பை சேர்ந்தவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்...

'சற்று முன் ஓபிஎஸ் மரணம்'. சட்டசபையில் முதல்வர் காட்டிய அதிர்ச்சி ஆதாரம்.

மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்ததால்தான் வன்முறை வெடித்தது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் ஒருசில ஆதாரங்களுடன் விளக்கம் அளித்து வரும் நிலையில் இன்னொரு அதிர்ச்சி தரும் பேனரின் புகைப்படத்தையும் காட்டியுள்ளார்...