தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரம்… அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியர்களின் பெரும் பண்டிகையான தீபாவளிக்கு மக்கள் பட்டாசுகளை வெடித்துக் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு, ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும் இரவு 7 -8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. மேலும் பாதுகாப்பு நடைமுறை தொடர்பாக சில விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும். அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. டெல்லி ஏற்கனவே அதிக காற்று மாசுபாட்டுடன் இருந்து வருவதால் பொது மக்கள் பட்டாசுகளை குறைவாக வெடிக்குமாறு மாநில அரசு கோரி வருகிறது. இன்னொரு பக்கம் டெல்லியில் முழுமையாக பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து விடலாம் என அறிவுறுத்தலையும் சமூகநல ஆர்வலர்கள் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout