தலைக்கு ஏறிவிட்ட போதை… தன் ஆண்குறியை தானே வெட்டி எறிந்த பரிதாபம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெர்மனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் மயங்கிய நபர் ஒருவர் தன்னுடைய ஆண் உறுப்பை தானே வெட்டி எறிந்த பரிதாப நிகழ்வு நடந்து உள்ளது. இதையடுத்து பதறிப்போன அந்த நபர் உடனடியாக அவசர தொலைபேசி எண்ணுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அந்த இடத்திற்கு வந்த போலீஸ் மற்றும் மருத்துவர்கள் முதல் உதவி கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
ஜெர்மனியின் பழைய மெயின்ஸ் நகரில் தங்கி இருந்த 47 வயதே ஆன நபர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையில் அந்த நபர் சவரக் கத்தியைக் கொண்டு தன்னுடைய ஆண் உறுப்பை தானே அறுத்து எறிந்து உள்ளார். பின்னர் நிலைமையை உணர்ந்த அந்த நபர் உடனடியாக அவசர தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலவரத்தைக் கூறியுள்ளார். இதனால் அந்த இடத்திற்கு வந்த போலீஸ் மற்றும் மருத்துவர்கள் உடனடியாக விரைந்து தனியே கிடந்த ஆண் உறுப்பை மீட்டு உள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதோடு அறுவைச் சிகிச்சை மூலம் அறுபட்ட ஆண் உறுப்பை இணைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் எனக் கூறிய நிலையில் அதுகுறித்த முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கஞ்சா போதையில் ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட மனிதரால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments