close
Choose your channels

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு...!பகிரங்க மன்னிப்பு கேட்ட ராசா..!

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதற்கு திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, பகிங்கிரமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-யின் பிறப்பு குறித்து கீழ்த்தரமாக, பிரச்சார களத்தில் பேசியிருந்தார் ஆ.ராசா. இவர் பேசியதற்கு தமிழகம் முழுவதும், அரசியல் கட்சியினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் அதிமுக அணியினர் ஆயிரக்கணக்கானோர் இணைந்து ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் அவரின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, எரிய வைத்தனர். தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில், ராசா இப்படி பேசியிருந்தது, கட்சியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. நான் அப்படி குறிப்பிடவில்லை, நான் பேசியதை வெட்டியும், ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுகிறார்கள் என்று ராசா தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் முதல்வர் பழனிச்சாமி நா தழுதழுத்த குரலில், பிரச்சாரத்தின் போது மக்களிடம் கண்கலங்கி பேசினார். இந்நிகழ்வு அதிமுக தொண்டர்களுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அதிமுக கூட்டணி சார்பாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹுவிடம் ராசா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுக்கப்பட்டது. இதன் பின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு விவகாரம் சூடுபிடிக்க தொடங்க, ராசாவே இறங்கி வந்து பகிங்கிரமாக மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து பேட்டியளித்த ராசா கூறியிருப்பதாவது,
என்னுடைய பேச்சால் முதல்வருடைய மனம் காயப்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய பேச்சுக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு, அந்த வீடியோவை வெட்டி, ஒட்டி சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். முதல்வர் அரசியலுக்காக இல்லாமல், மனதார காயப்பட்டிருந்தால், என் பகிரங்க மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். என்னதான் இவர் மன்னிப்பு கேட்டாலும், மேடைப்பேச்சுகளில் சரியான வார்த்தைகளை கூற வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ராசாவின் பேச்சு மகளிர் மத்தியில் முகம் சுழிக்கும் வகையிலும் அமைந்துள்ளதால், கட்சிக்கு நெகட்டிவ் விமர்சனங்களே தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment