பிறந்த நாளில் இறக்கை இல்லாமல் பறந்த அஞ்சலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் நடிக்க தெரிந்த மிகச்சில நடிகைகளில் ஒருவரான அஞ்சலி, கனமான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்கள் மனதை கவர்ந்து வருவது தெரிந்ததே. இவர் விஜய்சேதுபதியுடன் நடித்த 'சிந்துபாத்' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் அஞ்சலி சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சக திரையுலகினர்களும், ரசிகர்களும் வாழ்த்துமழை பொழிந்தனர்
இந்த நிலையில் பிறந்த நாளின்போது அஞ்சலி இறக்கை இல்லாமல் விண்ணில் பறந்துள்ளார். ஆம் அஞ்சலி தனது பிறந்த நாளில் ஸ்கைடைவிங் செய்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது. இறக்கையின்றி பறக்கும் இந்த ஸ்கை டைவிங்கில் என்ன ஒரு சந்தோஷம்? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சலியின் ஸ்கை டைவிங் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது
What good are wings without the courage to fly ??
— Anjali (@yoursanjali) June 20, 2019
Skydiving for my birthday ???? #Skydiving #fun #birthdaygirl #usa pic.twitter.com/dfmctMHN8t
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments